திங்கள், 6 செப்டம்பர், 2010

தமிழ்ஈழ அபிமானிகளே; கொலைமானிகளே…”புச்சிகர சூப்பர் ஸ்டார்” ஜான் மாஸ்டர் இன் நடிப்பில், இயக்கத்தில், வெளிவந்துள்ளது …..வியூகம்…Part -2




தமிழ்ஈழ அபிமானிகளே; கொலைமானிகளே(அதாவது கொலை காரர்களே) ;
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த,
மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு சஞ்சிகையான வியூகம் சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீடு ரொறன்ரோவில் செப்ரம்பர் 12ல் நடைபெறவுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, மே 18 இயக்கத்தின் ஊடக ஆலோசகர் திரு. ஜெயபாலன் அவர்களின் இணையதளமான,
தேசம் நெற் இல் வாசகர்கள் எழுதிய பின்னோட்டம் உங்களுக்காக இங்கு….. ….

varma on September 5, 2010 10:54 am
/புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்/
இது யாரைக் குறிக்கிறது? மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன். ஆனால் இப்போது இதை படிக்கும்போது அவர்களுக்கு மகிந்தவைவிட கீபொட் மாக்சியவாதிகளே பிரதான எதிரியாக தோன்றுவதால் இந்த மே18 இயக்கம் தமிழ்மக்களுக்கு தேவைதானா என யோசிக்கவைக்கிறது.
வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?

pothu on September 5, 2010 9:50 pm
// வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?/

வியூகத்திற்கு எதிராக யதீந்திரா எழுதவில்லை. வியூகம் தொடர்பாக தனது பார்வையையும் விமர்சனத்தையும் வைத்திருந்தார்.

தமிழ்வாதம் on September 6, 2010 1:49 am
/…மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன்…./ varma on September 5, 2010 10:54 am
எல்லா உச்சாடனமும், உத்வேகமும்,கதையும் மகிந்தவை மகிமைப்படுத்தவே. மாவோ மகிந்தவிற்கு காதோரமாகச் சொன்னது இதுதான். “துப்பாக்கியிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது.”

சுகுணகுமார் on September 6, 2010 7:02 am
சிங்கள தேசியத்தின் தோற்றம் அதன் பின் தமிழ் தேசியத்தின் இறுக்கம் அதன் பின் சிங்கள தேசியத்தின் மோசமான இறுக்கம் இது தொடரவே போகிறது. எனவே தேசிய விடுதலைப்போராட்டம் ஒன்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்த பின்னும் கனடாவில் இருந்தபடி மீள ஓரு தேசிய போராட்டத்தை கட்டியெழுப்ப முனைவது போல் தெரிகிறது! முதலில் யாருக்காக போரடுகிறீர்கள் புலம் பெயர் தமிழ் தேசியத்திற்கா அல்லது இலங்கை தமிழ் தேசியத்திற்கா? இலங்கை தமிழ் தேசியத்திற்கு என்றால் முதலில் இந்த வியூகம் மனிக் பாமில்தான் தனது வேலையை தொடங்கியிருக்கவேண்டும்.

மாறாக ஒரு கணனி முன் இருந்து தட்டிக்கொண்டு உண்மையான, மக்கள் நலம் சார்ந்த புரட்சியாளர்களை விமர்சிப்பது கவுண்டன் செந்தில் கொமடியையும் மிஞ்சுகிறது! அடிப்படை வசதிகள் அற்று இருக்கும் மக்களிற்கு தேவை உங்கள் கோட்பாடுகள் அல்ல! முதலில் களத்தில் இறங்க ஒரு வழியை பாருங்கள்!

அதற்கான தளம் தற்போது உள்ளது! கனடாவில் இருந்தபடி புனை பெயரில் புரட்சி செய்வதை விடுத்து மக்கள் போராட்டத்தை கட்டியெளுப்ப முதலில் மக்களிடம் போய்சேருங்கள்! இல்லை புலம் பெயர் மக்களிற்கு தான் புரட்சி என்றால் புலிப்பினாமிகளிற்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடங்குங்கள்! அதற்கான தேவை நிறையவே இருக்கிறது!

nantha on September 6, 2010 8:30 am
தமிழர் விடுதலை என்றது தமிழர்களின் குரல்வளைகளைத் திருகுவதில்த்தான் ஆரம்பிக்கிறது. “வியூகம்” அதனை ஆரம்பிக்கிறது என்றே எண்ணுகிறேன்.

இறுதியில் “தமிழர்களில்” ஒரு தொகையினர் மண்டையை போட்டபின் “கேபி” மாதிரி “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று அறிக்கையும் வெளிவரலாம்!

சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்.

பல்லி on September 6, 2010 10:59 am
//சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்//
இதை சொல்லுவது நந்தா?? எல்லாமே அவன் செயல்:

kadavul on September 6, 2010 3:12 pm
நந்தா சொல்வது சரி. வியூகமும் தமிழ் ஈழத்தைத்தான் தனது தீர்வாக முன் வைக்கின்றது. தீர்வை யாரும் முன் வைக்கலாம். நடைமுறை சாத்தியமானது எது என எந்த ஆய்வும் இல்லாமல் வெறும் குளிர் காய முன் வைக்கப்படும் கோசங்களாக மாறிவிடும். அது தான் நடக்கின்றது. வியூகத்தின் பிண்ணனியில் இயங்கும் கூட்டம் இதைத்தான் செய்கின்றது.செய்தது. தமிழீழக் கோசத்தில் வெற்றி பெற்றவர்கள் யாழ்ப்பாணிகளே. புலம் பெயர் நாடுகளில் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றார்கள். மீண்டும் ஒரு தடவை இளைஞர்களை பலிக்கடாவாக்கும் முயற்சியில் வியூகம் இறங்கியுள்ளார்கள்.